Wednesday, July 1, 2009

M B C-யில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்திஆர்பாட்டம்



தமிழ்நாடு வாணியர் பேரவையின் சார்பில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கியுள்ள நம் வாணியர் இனத்தை MBC-யில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முனபாக 30-06-2009 அன்று பேரவை நிறுவனர்-தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ,நம் சமுதாயத்தின் முதுபெரும் தலைவர் வி.தண்டபாணி செட்டியார்,பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் C.L.செல்வம் அவர்கள் முன்னிலையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட வாணியர்குல மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன்,சென்னை மாவட்ட ஆட்சியாளர்,பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.