Wednesday, July 14, 2010

Thursday, July 1, 2010

முப்பெரும் விழா

அன்புடையீர்!
தமிழ்நாடு வாணியர் பேரவை வருகிற ஞாயிறு 4/07/2010 அன்றுமாலை 3.00 மணிக்கு முப்பெரும் விழாவை சென்னையில்[தியாகராயர் நகரில் உள்ள]சர்.பிட்டி.தியாகராஜர் அரங்கில் மிகச்சிறப்பாக நடத்த உள்ளது.
நமது சமூகத்தில் இந்த ஆண்டு ஐ ஏ எஸ் மற்றும் ஐ பி எஸ் தேர்வாகியுள்ளவர்களுக்கு பாராட்டுவிழாவும்,10ம் வகுப்பு,12ம் வகுப்பில் முதலிடம் பெறும் தலா மூன்று மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும்,வாணியர் பேரவையின் மூன்றாமாண்டு விழாவும் நடைபெறவுள்ளது.விழாவுக்கு அனைவரும் தவறாமல் வருகைபுரிந்து விழாவை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
நிகழ்ச்சிநிரல்
மாலை 3 மணிக்கு : ஸ்ரீதர் நவாரக்ஸ் இன்னிசை நிகழ்ச்சி
மாலை 5 மணிக்கு : இறைவணக்கம்
தலைமை : : ஆர்.பன்னீர்செல்வம்
முன்னிலை: வி.தண்டபாணி செட்டியார்
: டி.வி.பிரகாசம்
தருமபுரி ராஜேந்திரன்
பி.மணிவண்ணன்.
வாழ்த்துரை : எ.வ.வேலு ( உணவு அமைச்சர் )
எ.கே.எஸ்.விஜயன்(நாகை மாவட்பாராளுமன்ற உறுப்பினர் )
எஸ்.ராஜகுமார் (சட்டமன்ற உறுப்பினர்)
சி.எல்.செல்வம்.(மாநில பொதுச்செயலாளர்)
மற்றும் பலர்.

Wednesday, June 23, 2010

நம் தலைவருக்கு இன்று பிறந்த நாள்


நம் தலைவருக்கு இன்று (24-06-2010)பிறந்த நாள்.தமிழ்நாடு வாணியர் பேரவை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட,பகுதி, வாணியர் பெருமக்கள் சார்பில் நிறுவனர்- தலைவர் திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களுக்கு அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Saturday, May 8, 2010

மஞ்சள் நீராட்டு விழா

நமத வாணியர் சமுகத்தைச் சேர்ந்த தினமலரில் பணிபுரியும் திரு .ஆ. நவநீத கிருஷ்ணன் அவர்களின் புதல்வி திருநிறைச் செல்வி.ந.மகேஸ்வரியின் மஞ்சள் நீராட்டு விழா 3-05-2010 அன்றுசென்னை பள்ளிக்கரணையில் உள்ள செண்பகத்தம்மாள் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்நாடு வாணியர் பேரவையின் நிறுவனர்-தலைவர் திரு.ஆர்.பன்னீர்செல்வம் அவர்களின் சார்பில் தலைமை நிலையச் செயலாளர் திரு.கல்யாண சேகர் மற்றும் மாநில இணைச்செயலாளர் கே.குப்புசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள்

தமிழ்நாடு வாணியர் பேரவை- தலைவர் R.பன்னீர்செல்வம்,
வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,
ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,
லயன் வி.ஆர்.ஜெகதீசன்,
VYWA தலைவர்.K.மணிகண்டன்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்தனர் .வாணியர் சங்க பிரதிநிதிகள் விழாவினை சிறப்பித்தனர்.


ஆர் கே எஸ் சிலைக்கு மாலை அணிவித்தபின் சென்னை அனைத்துச் செட்டியார்கள் நலச் சங்கத்தின் முதலாண்டு நிறைவு விழாவினை தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் ஆர்.பன்னீர் செல்வம் அவர்கள் மற்றும் வி.தண்டபாணி செட்டியார்,ஆர்.கோட்டீஸ்வரன்,ஆர்.சண்முகம் ,லயன் வி.ஆர்.ஜெகதீசன் முதலானோர் குத்துவிளக்கேற்றி துவக்கிவைத்தனர்.




Tuesday, May 4, 2010

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் - நினைவு நாள்


டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் அவர்களின் நினைவு நாள் 5/05‍/2010அன்று மாலை 5‍.00 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு
தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம்,
பொதுச்செயலாளர் சி.எல்.செலவம்,
வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,
ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார்,
லயன் வி.ஆர்.ஜெகதீசன்,
VYWA தலைவர்.K.மணிகண்டன்
உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.வாணியர் குலமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Friday, February 19, 2010

கோயம்பத்தூரில் ஐம்பெரும் விழா

14-01-2010 அன்று கோயம்பத்தூரில் ஐம்பெரும் விழா மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.விழா காலை 10-00 மணிக்கு மங்கள இசையுடன் தொடங்கியது 10-30 மணிக்கு ஒரு கிலோமீட்டர் தூரம் வழிநெடுகிலும் மக்கள் வெள்ளத்தில் தலைவர் R.பன்னீர்செல்வம் அவர்களுக்கு கேரளா செண்டு மேளம் , இளைஞரணி மகளிரணி சார்பில் மிகபிரம்மாண்டமான உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.









































































கோவில்பட்டியில் ஐம்பெரும் விழா


7-01-2010 கோவில்பட்டி வணிக வைசிய சங்கம்,வணிக வைசிய இளைஞரணி மற்றும் மகாத்மா காந்தி சிலை அமைப்புக் குழு இணைந்து நடத்திய ஐம்பெரும் விழா நடைபெற்றது.
சமூகக் கொடியேற்று விழா
மங்கலதேவி கண்ணகி படத்திறப்பு விழா
வணிக வைசியப் பள்ளி கூடுதல் கட்டட அடிக்கல் நாட்டு விழா
மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா
வணிக வைசிய குல பீஷ்மர் தியாகி ட்.செண்பகம் செட்டியார் 100 வது ஆண்டு பிறந்தநாள் பாராட்டு விழா
ஆகியன வெகு சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் தமிழ்நாடு வாணியர் பேரவை நிறுவனர் தலைவர் R.பன்னீர்செல்வம், காப்பாளர் V.தண்டபாணி செட்டியார் ,செயலாளர்
C.L.செல்வம், மற்றும் மாநில‌ மாவட்ட பகுதி நிர்வாகிகள்.பெருந்திரளான சமூக மக்கள் கலந்துகொண்டனர்.

Monday, January 25, 2010

குடியரசு தின வாழ்த்துக்கள்


அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.

Wednesday, January 13, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்



அனைத்து வாணிய சமூக மக்களும் ஒற்றுமையுடனும் சந்தோஷத்துடனும் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும்,வாணியர் இனமே இந்த ஆண்டில் ஒன்று திரளவும் தமிழ்நாடு வாணியர் பேரவையின் மாநில, மாவட்ட,பகுதி நிர்வாகிகளுக்கும்,பொதுக்குழு உறுப்பினர்களுக்கும்,பேரவை உறுப்பினர்களுக்கும் நிறுவனர் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள் பொங்கல் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறார்.