Tuesday, October 27, 2009

அலுவலக திறப்பு விழா!

தமிழ்நாடு வாணியர் பேரவையின் மத்தியசென்னை தென் சென்னை மாவட்டக் கிளை அலுவலக திறப்பு விழா திருவல்லிக்கேணியில் நடைபெற்றது. ஸ்ரீமதி லோகாம்மாள் அறக்கட்டளை கட்டிடத்தில் திரு.ஆர்.பன்னீர் செல்வம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.








Sunday, October 18, 2009

டாக்டர்.ஆர்.கே.எஸ்.அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா




டாக்டர்.ஆர்.கே.எஸ்.அவர்களின் 118 வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

Friday, October 16, 2009

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 118 வது பிறந்தநாள் விழா

டாக்டர்.ஆர்.கே.சண்முகம் செட்டியார் 118 வது பிறந்தநாள் விழா 17-10-09அன்று காலை9-30 மணிக்கு சென்னை ராஜாஅண்ணாமலை மன்றத்தில் உள்ள அவரது திரு உருவச்சிலைக்கு அண்ணாமலைபல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் டாக்டர் .S.V.சிட்டிபாபு மற்றும்,தமிழ்நாடு வாணியர் பேரவைத் தலைவர் R.பன்னீர்செல்வம்,பொதுச் செயலாளர் சி.எல்.செல்வம், வாணியர் சங்க முன்னணித்தலைவர் V.தண்டபாணி செட்டியார்,ஆர்.கோட்டீஸ்வரன் செட்டியார் K.மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செய்யவுள்ளனர்.வாணியர் குலமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

Friday, October 2, 2009

காந்தியடிகளின் பிறந்தநாள் விழா





சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள வாணியர் குல மாணிக்கம் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மாலையணிவித்து மரியாதை செய்யும் நிகழ்ச்சி சிறப்பாக கொண்டாடப்பட்டது.நிகழ்ச்சியில் சமூகத்தலைவர்கள் மற்றும் மாநில ,மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டு பிறந்தநாள் விழாவை சிறப்பித்தனர்.

Tuesday, September 29, 2009

மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாள்



தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்டோபர் 2 ம் தேதியன்று சரியாக காலை 10-00 மணிக்கு சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள காந்திஜி அவர்களின் சிலையின் முன்பு அஞ்சலி நிகழ்ச்சி நடைபெறும். நம்சமூகத்தின் முன்னணித் தலைவர்கள்,மற்றும் அனைத்து சங்க நிர்வாகிகள், அனைவரும் கலந்து கொள்வார்கள்.தாங்களும் குடும்பத்துடன் கலந்துகொண்டு நம் வாணியர் குல முன்னோடியான மகாத்மாவுக்கு அஞ்சலி செலுத்த அலைகடலென திரண்டு வருக என வரவேற்கிறோம்.

M B C-யில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்திஆர்பாட்டம்

வாணியர் பேரவை சார்பில் நம் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர்(MBC)பிரிவில் சேர்க்கக்கோரி நாகர்கோயில் மாவட்டத்தில் 25-09-09 அன்று தமிழ்நாடு வாணியர் பேரவையின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

தமிழ் முரசு செய்தி

Saturday, August 29, 2009

கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்பாட்டம்


வாணியர்
பேரவை சார்பில் நம் சமூகத்தை மிகவும் பிற்பட்டோர்(MBC)பிரிவில் சேர்க்கக்கோரி அன்று 28-08-2009 காலை 10 மணியளவில் கடலூர் மாவட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை: நிறுவனர் தலைவர்.ஆர்.பன்னீர்செல்வம்.
முன்னிலை: பொதுச்செயலாளர் .C.L.செல்வம்.
வாழ்த்துரை: முதுபெரும் தலைவர்.வி.தண்டபாணி செட்டியார்,
மற்றும் மாநில மாவட்ட பகுதி நிர்வாகிகள் உட்பட 3000 க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

பத்திரிக்கை செய்திகள்




தினகரன்

Thursday, August 27, 2009

மாபெரும் கண்டன ஆர்பாட்டம்

28-08-2009 காலை 10 மணியளவில் கடலூர் மாவட்டத்தில் M B C யை வலியுறுத்தி சமுக தலைவர்கள்,மற்றும் சமுக பெருமக்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெறுகிறது.

Wednesday, July 1, 2009

M B C-யில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்திஆர்பாட்டம்



தமிழ்நாடு வாணியர் பேரவையின் சார்பில் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் மிகவும் பின் தங்கியுள்ள நம் வாணியர் இனத்தை MBC-யில் சேர்க்க தமிழக அரசை வலியுறுத்தி சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முனபாக 30-06-2009 அன்று பேரவை நிறுவனர்-தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் ,நம் சமுதாயத்தின் முதுபெரும் தலைவர் வி.தண்டபாணி செட்டியார்,பேரவையின் மாநிலப் பொதுச்செயலாளர் C.L.செல்வம் அவர்கள் முன்னிலையிலும் ஆர்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட வாணியர்குல மக்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் KKSSR.ராமச்சந்திரன்,சென்னை மாவட்ட ஆட்சியாளர்,பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உள்ளிட்டவர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

































Monday, June 22, 2009

வடசென்னை மாவட்டக்கூட்டம்


21/6/2009 அன்று சென்னை வண்ணார பேட்டையில் வடசென்னை மாவட்டக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நிறுவனர் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் சி.எல்.செல்வம் மற்றும் சமூகத் தலைவர் வி.தண்டபாணி செட்டியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.தென் சென்னை,மத்திய சென்னை,வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக பெருமக்கள்,மகளிர் அணியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தலைவர் தமது சிறப்புரையில் நமது மக்களுக்கு கல்வி வளர்ச்சி பணிகளும்,சமூக மேம்பாட்டுத் திட்டங்களும்,MBC பெறுவதற்கு அரசின் கவனத்தில் கொண்டு வருவதற்கும் நாம் போராட்டங்களை நடத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.மேலும் நம்முடைய சமுதாய மேம்பாட்டிற்கு நாம் வரும் தேர்தலில் அரசியல் காட்சிகளுக்கு இணையாக நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Saturday, May 30, 2009

மத்திய சென்னை மாவட்டக் கூட்டம்

தமிழ்நாடு வாணியர் பேரவையின் மத்திய சென்னை மாவட்டக்கூட்டம் 29-05-2009 அன்று மீர்சாகிப் பேட்டை வாணியர் சங்கக் கட்டடத்தில் நடைபெற்றது.