Monday, June 22, 2009

வடசென்னை மாவட்டக்கூட்டம்


21/6/2009 அன்று சென்னை வண்ணார பேட்டையில் வடசென்னை மாவட்டக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நிறுவனர் தலைவர் ஆர்.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.மாநில பொதுச்செயலாளர் சி.எல்.செல்வம் மற்றும் சமூகத் தலைவர் வி.தண்டபாணி செட்டியார் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.தென் சென்னை,மத்திய சென்னை,வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சமூக பெருமக்கள்,மகளிர் அணியினர் பெருமளவில் கலந்து கொண்டனர்.
தலைவர் தமது சிறப்புரையில் நமது மக்களுக்கு கல்வி வளர்ச்சி பணிகளும்,சமூக மேம்பாட்டுத் திட்டங்களும்,MBC பெறுவதற்கு அரசின் கவனத்தில் கொண்டு வருவதற்கும் நாம் போராட்டங்களை நடத்தவேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார்.மேலும் நம்முடைய சமுதாய மேம்பாட்டிற்கு நாம் வரும் தேர்தலில் அரசியல் காட்சிகளுக்கு இணையாக நாம் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment